கொரோனா நிவாரணம்: சமூகம் எனக்கு செய்ததை இப்போது திருப்பி செய்கிறேன்! - 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர்..!

4500 பேருக்கு ஒரு தொழிலதிபர் கடந்த ஒரு வாரமாக உணவு வழங்கி வருகிறார் என்று சமூக வலைதங்களில் அவருக்கு புகழாரங்கள் நிரம்பின. மாறா அடக்கத்துடன் இந்த உணவு விநியோகத்தைக் குறித்து பதிலளித்தார் செல்வகணேஷ்.

"நான் நடுத்தரக் குடும்பத்தில் இருந்து மேலே வந்த ஒருவன். எனக்கு சமூகம் செய்ததை நான் திருப்பி செய்கிறேன்.


இந்த தொற்று நோய் அச்சம் பலரின் சாதாரணமான வாழ்வை தலைகீழாக்கியுள்ளது. 4500 பேருக்கு காலையும், இரவும் டிஃபனும், மதியம் கலவை சாதமும் செய்து விநியோகித்துவருகிறோம்.

ஆயிரக்கணக்கில் முகக்கவசங்களையும் தயாரித்து விநியோகிக்க இருக்கிறோம்” என்கிறார் சிவகணேஷ் எந்த அலட்டலும் இல்லாமல்.